பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல்
பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 02, 2026 02:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணி-களை மாநில கண்காணிப்பு பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, கிருஷ்ணகிரி நகராட்சி துவக்கப்பள்-ளிக்கு சென்றவர், காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார். சீனிவாசா காலனியில் குப்பை சேகரிக்கும் பணிகளை பார்வை-யிட்டு, குப்பையை, 4 வகைகளாக பிரித்து வாங்க அறிவுறுத்-தினார். திருவண்ணாமலை ரோடு, மகாராஜகடை சாலை பகுதி-களில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, வடகிழக்கு பருவ-மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்-பட்டுள்ளது என்பதை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளை பார்வையிட்டு அவற்றை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, நுண் உர செயலாக்க மையங்கள், வள மீட்பு மையத்தில் நடக்கும் பணிகள், செயலாக்கம் குறித்த பிளக்ஸ் பேனர்கள் வைக்க அறிவுறுத்தினார். உரங்கள் தயாரிக்கப்-பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பாப்பாரப்பட்டி ஏரி, கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எரிவாயு தகனமேடை பராமரிப்பு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிக-ளுக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி கமிஷனர் சேகர், பொது சுகாதார பிரிவு அலுவலர்கள் பாண்டியராஜன், வடிவேல், சோமேஷ் உள்ளிட்டார் உடனிருந்-தனர்.
* தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். வார்டு, 7, 37 பகுதி-களில் நுண் உர கூடங்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
