/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு பேரணி
/
அரசு பள்ளியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 05, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், நேற்று 'மஞ்சப்பை' விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் கிரிஜா லட்சுமி தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். 'மஞ்சப்பை' விருது பெற்ற நல்லாசிரியர் பவுன்ராஜ், விழிப்புண ர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதில், 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம், ராயக்கோட்டை சாலை வழியாக சென்று பள்ளிக்கு வந்தனர். பேரணியில், பொதுமக்களுக்கு, 'மஞ்சப்பை' விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், 'மஞ்சப்பை' ஆகியவற்றை வழங்கினர். மேலும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், 'மஞ்சப்பை'களை பயன்படுத்துவோம் என, பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். இதில், உதவி தலைமை ஆசிரியர் சாந்தி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், போலீஸ் எஸ்.ஐ., புகழ்வாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.