/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
மின்வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 16, 2025 06:23 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மின்வாரியம் சார்பில், மின் சிக்கன வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் பழனி தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஆனந்தராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மின்வாரிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், மின்சாரத்தை சேமிப்போம். இயற்கை வளத்தை பாதுகாப்போம். உலகம் வெப்பமயமாதலை குறைப்போம். மின்சாரம் வீணாகாமல் எல்.இ.டி., விளக்கை பயன்படுத்துவோம். சூரிய ஒளி மின்சாரமாக மாற்றுவோம். சூரிய பலகைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

