/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
/
கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 19, 2025 01:18 AM
சூளகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கள்ளச்
சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது.
இதில், மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகள் பற்றி எழுதிய பதாகைகளை ஏந்தியபடியும், தொடாதே தொடாதே மதுவை தொடாதே, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன், ஆங்கில ஆசிரியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.