/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் குவாரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
கிரானைட் குவாரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 24, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், மாவட்ட, கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், கிரானைட் குவாரிகளில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாஜீம் ஆலி, பொருளாளர் பரீத்அலி முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், மத்திய அரசின் சார்பில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குனர் முகமது நியாசி மற்றும் துணை இயக்குனர் மகேஷ் சாட்லா ஆகியோர், கிரானைட் குவாரிகளில் எவ்வாறு பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வது, செயல்படுத்துவது, பணியாளர்கள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தங்களை தற்காத்துக் கொள்வது, அதற்குண்டான பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பது பற்றி எடுத்துரைத்தனர்.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு, வகுத்து கொடுத்திருக்கும் சட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. குவாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.