/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு
/
அரசு மகளிர் கல்லுாரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு
அரசு மகளிர் கல்லுாரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு
அரசு மகளிர் கல்லுாரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 24, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான கனகலட்சுமி வரவேற்றார்.
மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் சரவணகுமார், பாலின உளவியல் குறித்தும், திருநங்கைகளின் மனநிலை, மாதவிலக்கு நேரங்களில் பெண்களின் மனநிலை, பெண் குழந்தைகளின் மனநிலை, பெற்றோர்களின் மனநிலை, குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துகளையும், பாலின உளவியலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் மாணவியருக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.
கல்லுாரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.