/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை, நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க விழிப்புணர்வு
/
சாலை, நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க விழிப்புணர்வு
ADDED : நவ 14, 2024 06:57 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், களர்பதி பஞ்.,ல், பஞ்., தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நேற்று நடந்த, 2025 - 26ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயா-ரித்தல் குறித்த நிகழ்ச்சி நடந்தது.
இதில், சாலை, நீர் வள ஆதாரங்களான ஏரி, குளம், குட்டை-களை பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது நீர்நிலைகளை கிராம மக்கள் ஓவியமாக வரைந்தனர்.தொடர்ந்து, துணை பி.டி.ஓ., பொன்னுசாமி, பஞ்., துணைத்த-லைவர் கருணாநிதி, கிராம செவிலியர், தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சுயஉதவிக்குழு,
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் 18 அரசு துறைகளின் அலுவலர்கள், பஞ்., பகுதிகளில் விழிப்புணர்வு நடைபயணம் சென்றனர்.

