நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே சமந்துாரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சிந்து, 22. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்த சிந்து-விற்கு கடந்த, 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு கன்யா ஸ்ரீ என பெயர் வைத்தனர். ஓசூர் அடுத்த சேவகானப்பள்ளி அருகே கூஸ்தனப்பள்ளியிலுள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் சிந்து தங்கியிருந்தார். கடந்த, 21 இரவு, 9:00 மணிக்கு, குழந்தைக்கு பால் கொடுத்து துாங்க வைத்தார். இரவு, 11:00 மணிக்கு பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தது. தாய் சிந்து புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

