/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்டையில் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்
/
குட்டையில் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்
குட்டையில் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்
குட்டையில் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்
ADDED : டிச 05, 2025 11:14 AM
ஓசூர்: அஞ்செட்டி அருகே, வனத்திலுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து நீரில் தத்தளித்த குட்டி யானையை, வனத்துறையினர் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த மிலிதிக்கி கிராமத்தை ஒட்டிய உளிபண்டா வனப்பகுதியில், அதிகளவில் யானைகள், உள்-ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விலங்குகள் தண்ணீர் குடித்து செல்லும் வகையில், அங்கு வனத்துறையினர் தண்ணீர் குட்டை ஒன்று அமைத்துள்ளனர். இதில் தற்-போது அதிகளவு தண்ணீர் உள்ளது.
இந்த குட்டைக்கு நேற்று முன்தினம் நள்ளி-ரவில், குட்டிகளோடு வந்த யானைகள் கூட்டம், தண்ணீர் குடித்துள்ளன. அப்போது கூட்டத்திலி-ருந்த, 6 மாத குட்டி யானை ஒன்று, அக்குட்-டைக்குள் தவறி விழுந்துள்ளது. அதை பார்த்த தாய் யானை உள்ளிட்ட பிற யானைகள் அக்குட்-டியை காப்பாற்ற கடும் போராட்டத்தை நடத்தி-யுள்ளன. ஆனால் கடைசி வரை யானைகளால், குட்டியை குட்டையிலிருந்து மீட்க முடியவில்லை. தொடர்ந்து யானை கூட்டம் அங்கிருந்த அடர்ந்த பகுதிக்கு சென்றுள்ளன.
குட்டை நீரில் குட்டி யானை தவிப்பதை நேற்று காலையில் பார்த்த அப்பகுதியினர், ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற வனத்-துறையினர், குட்டையில் தத்தளித்த குட்டி யானையை நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி, நேற்று மதியம் மீட்டனர். ஆனால் அந்த குட்டி யானை, தங்கள் கூட்டத்தோடு சேர செல்லாமல், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சுற்றி வருகிறது.

