/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை கூட்டத்துடன் சேராமல் தனியாக உலா
/
தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை கூட்டத்துடன் சேராமல் தனியாக உலா
தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை கூட்டத்துடன் சேராமல் தனியாக உலா
தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை கூட்டத்துடன் சேராமல் தனியாக உலா
ADDED : பிப் 04, 2025 06:45 AM
ஓசூர்: ராயக்கோட்டை அருகே, தாயிடமிருந்து பிரிந்த குட்டி யானை, கூட்டத்துடன் சேராமல் தனியாக உலா வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்-பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20 க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. இதில் தாயி-டமிருந்து பிரிந்த, 2 வயதான ஆண் குட்டி யானை, கூட்டத்தில் சேராமல் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது. கடுர், கொத்துார் பகு-தியில்
சுற்றித்திரிந்த அதை, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் ராயக்கோட்டை வனத்துறையினர் விரட்டினர். நேற்று
முன்தினம் இரவு அங்கிருந்து வெளியேறிய குட்டி யானை, பாவாடரப்பட்டி அருகே வனப்பகுதியை ஒட்டிய
அடக்கம் கிராமத்தில் உலா வந்-தது. தாயிடமிருந்து பிரிந்ததால், சரியாக உணவு உட்கொள்ளாமல் மிகவும்
சோர்வாக காணப்பட்டது. அதன் அருகே பொதுமக்கள் சென்றபோது, அவர்களை தாக்காமல் சாதுவாக இருந்தது. வனத்துறையினர் குட்டி யானையை போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். தாயை பிரிந்ததால் அந்த யானையை,
மற்ற யானைகள் கூட்டத்துடன் சேர்ப்பதில்லை. அடிக்கடி வனப்பகு-தியை விட்டு வெளியேறும் குட்டி யானை,
கிராமங்களுக்குள் புகுந்து விடுவதாக, வனத்துறையினர் கூறுகின்றனர். யானை மிகவும் சோர்வாக
காணப்படுவதால், வனத்துறையினர் முன்னெச்-சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, யானைக்கு உணவு
கிடைப்-பதை உறுதி செய்ய, விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.