/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : செப் 20, 2024 02:26 AM
ஓசூர்: ஓசூரில், மாவட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாவட்ட பொதுச்-செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நாராயணசாமி, வழக்கறிஞர்கள் மஞ்சுநாத், சுந்தர் மற்றும் ஓசூர் நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நாகராஜ் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.
இதில், மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், மனோகர், முருகன், பிரவீன்குமார், சூளகிரி மத்திய ஒன்றிய தலைவர் லட்சுமிபதி, சூளகிரி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் பாப்பண்ணா, சுரேஷ், குரு-பிரசாத் மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் கிஷோர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வீரேந்திரா, அணி பிரிவு தலைவர்கள் மஞ்சுளா, குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.