/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 26, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேஷ் காலனியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
அதிகாலையில் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடந்தன. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கெலமங்கலம் பி.டி.ஓ., முருகன், பஞ்., செயலர்கள் வெங்கடேஷ், மதுகுமார் உட்பட பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று கொண்டனர்.