/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
/
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED : ஜூலை 29, 2025 01:22 AM
ஓசூர், ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 3,000 வளையல்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில், 20,000 வளையல்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஓசூர் முல்லை நகர் காயத்ரி அம்மன் கோவிலில், வளையல் அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், துர்க்கையம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது. தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சீர்வரிசை வழங்கப்பட்டன.
* ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. ஆடிப்பூரத்தையொட்டி, பெண்கள் மாரியம்மனுக்கு, மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கூழ் எடுத்துச் சென்று கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது.