/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணா கல்லுாரி தாளாளருக்கு 'சிறந்த கல்வியாளர் விருது'
/
கிருஷ்ணா கல்லுாரி தாளாளருக்கு 'சிறந்த கல்வியாளர் விருது'
கிருஷ்ணா கல்லுாரி தாளாளருக்கு 'சிறந்த கல்வியாளர் விருது'
கிருஷ்ணா கல்லுாரி தாளாளருக்கு 'சிறந்த கல்வியாளர் விருது'
ADDED : அக் 18, 2024 02:59 AM
கிருஷ்ணகிரி, அக். 18-
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனபள்ளியில், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது.
கல்லுாரி தாளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான பெருமாளுக்கு, தனியார் கல்லுாரி கூட்டமைப்பின் சார்பில், கல்வி சேவைக்கான, 'சிறந்த கல்வியாளர் விருது' வழங்கப்பட்டது. பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் ஜெகன்நாதன், கல்லுாரி தாளாளருக்கு சிறந்த கல்வியாளருக்கான விருதை வழங்கினார்.
கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான வள்ளி பெருமாள், 'பாசம்' அமைப்பின் தலைவர் மற்றும் பத்மாவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் சத்தியமூர்த்தி, சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜவிநாயகம், கொங்கு நாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், பாரதியார் கலை மற்றும் அறிவியல்
கல்லுாரியின் தலைவர்
ராமசாமி மற்றும் பெரியார் பல்கலைக் கழக ஆட்சி குழு உறுப்பினரும் வித்யா
கலை மற்றும் அறிவியல்
கல்லுாரியின் முதல்வர் வெங்கடாச்சலம், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர், விருது பெற்ற கிருஷ்ணா கலை கல்லுாரி தாளாளர் பெருமாளுக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.