/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
/
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம் மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
ADDED : பிப் 13, 2025 03:19 AM
ஓசூர்: மதகொண்டப்பள்ளி பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தை, 3 மாநில பக்தர்கள் தரிசனம் செய்-தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, மதகொண்டப்பள்ளி பிர-சன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்தி-ருவிழா மற்றும் மாடுகள் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 5 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு ரத சப்தமி உற்சவம், ஸ்ரீவாரி சந்-திரபிரப வாகன உற்சவம், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், ஸ்ரீவாரி கல்பவிருட்ச வாகன உற்சவம், முத்துபந்தல் உற்சவம், கொடியேற்றம், ஹனுமந்தோற்சவம், சேஷ வாகன உற்சவம், அஸ்வ வாகன உற்சவம், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், கருடோத்சவம், உரடோற்சவம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று மதியம், 12:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ மூர்த்திகளுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவில் டோலோற்சவம் நடந்தது. இன்று சாலிவாகன உற்சவம், சித்ரமண்டபோற்சவம், நாளை துாபசேவை உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஹம்சவாகனோற்சவம் என, பல்வேறு நிழ்ச்சிகள் நடக்-கிறது. வரும், 19 ல் வதந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு
பெறுகிறது.