ADDED : மார் 15, 2024 02:34 AM
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,
பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. ஊத்தங்கரை
அடுத்த, பாவக்கல் கிராமத்தில் சமுதாய கூட்டத்திற்கு சுற்றுச்சுவர்
அமைக்க, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிக்கும், அத்திப்பாடி
கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்க, 4.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான
பணிகளுக்கும் பூமி பூஜை செய்து, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தமிழ்செல்வம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இலவம்பாடி கிராமத்தில்,
10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை மற்றும்
தீர்த்தகிரி வலசை பாரதி நகரில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து
வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது,
வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம்,
வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி தெற்கு கிருஷ்ணன், முன்னாள்
ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் உப்பாரப்பட்டி பஞ்., தலைவர்
சாமிநாதன், வடக்கு ஒன்றிய பொருளாளர் சேட்டுகுமார், முன்னாள் மாவட்ட
கவுன்சிலர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

