ADDED : செப் 19, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட மலைதாங்கியில், பிர-தம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டவும், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கவும் நேற்று பூமி பூஜை நடந்தது.
அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பசுபதி, பஞ்., தலைவர் மாதேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.