/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
/
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
ADDED : நவ 06, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
ஓசூர், நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொத்தகொண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பொம்மாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என, மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், இரு கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 35.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். பஞ்., தலைவர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.