/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபட் மீது பைக் மோதல்: வாலிபர் பலி; இருவர் காயம்
/
மொபட் மீது பைக் மோதல்: வாலிபர் பலி; இருவர் காயம்
ADDED : நவ 02, 2024 04:17 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தை சேர்ந்தவர் சூடப்பா மகன் வரதராஜ், 21; கேபிள் 'டிவி' பொருத்தும் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், சுசூகி ஆக்சஸ் மொபட்டில் சென்றார். பென்னங்கூர் கிராமம் அருகே மதியம், 1:30 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக ஓசூர் அருகே முத்தாலியை சேர்ந்த சென்னன், 22, ஓட்டி வந்த பஜாஜ் பல்சர் பைக், வரதராஜ் சென்ற மொபட் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வரதராஜ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னன் மற்றும் அவருடன் பைக்கில் வந்த மாதேஷ், 25, ஆகியோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.