நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கருக்கன்சாவடி அடுத்த, பொன்னன்நகரை சேர்ந்த முனியப்பன், 28. இவர் தர்மபுரி டவுன் வள்ளல் திடல் அருகில்,
டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 17 அன்று மாலை, 6:00 மணிக்கு அவருடைய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை, தர்மபுரி அரசு
மருத்துவமனை வளாகத்தில், நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. இது குறித்து, புகார் படி,
தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.