/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருதரப்பு மோதல்: 27 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல்: 27 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 20, 2024 09:41 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பள்ளத்துாரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. சுவாமி ஊர்வலத்தின் போது, பள்ளத்துாரை சேர்ந்த வேடியப்பன் என்பவருக்கும், சக்திவேல் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் வேடியப்பன் மகன் நிவாஸ், 22, என்பவரை சக்திவேல் தரப்பினர் துரத்தி சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள ஜோதி என்பவருடைய வீட்டில் நிவாஸ் நுழைந்துள்ளார்.
சக்திவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் நிவாஸை தாக்க சென்ற போது, ஜோதி தடுத்துள்ளார் ஜோதியை தாக்கி அவர் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, அவரை கீழே தள்ளி மானபங்கப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக, சிங்காரப்பேட்டை போலீசில் ஜோதி கொடுத்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் சக்திவேல், பாண்டியன், ஏழுமலை, மஞ்சுநாதன், விக்ரம், குமரேசன், தமிழரசன், சேகர், சிரஞ்சீவி, விஜி, கார்த்திக், செல்வகுமார், ராம் ஆகிய, 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேல், 22, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் சக்திவேல் கொடுத்த புகார்படி, வேடியப்பன், சசிகுமார், சிவா, மணிகண்டன், சேரன், அண்ணாமலை, விஷ்வநாதன், சக்திவேல், பாபு, கோகுல், தினகரன், கார்த்திக், சக்திவேல், ஜோதி ஆகிய, 14 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவா, 40, மணிகண்டன், 22, ஆகிய இருவரை கைது செய்தனர்.