/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
/
பா.ஜ., தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
ADDED : அக் 15, 2024 07:07 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம், ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், எவ்வாறு தீவிர உறுப்பினராக விண்ணப்பிப்பது என ஆலோசனை வழங்கினார்.
கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும், 50 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான், தீவிர உறுப்பினர் என்ற பெயரை பெற்று, கட்சியில் பதவிக்கு வர முடியும் என எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் முனிராஜூ, சீனிவாசரெட்டி, மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் முருகன், மண்டல தலைவர்கள் ரமேஷ்கண்ணன், நாகேந்திரா, லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.