/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., அண்ணாமலை பிறந்த நாள் விழா
/
பா.ஜ., அண்ணாமலை பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 05, 2025 01:06 AM
ஓசூர், தமிழக, பா.ஜ., முன்னாள் மாநிலத்தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலையின் பிறந்த நாள், கிருஷ்ணகிரி, பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமையில், ஓசூரில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஓசூர், வேல்முருகன் கோவிலில், அண்ணாமலை பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு மண்டலம், போச்சம்பள்ளி நான்குரோடு சந்திப்பில், அண்ணாமலையின் உருவ படம் பொாறித்த பிரமாண்ட கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பேரூஹள்ளி சிவசித்த மலையில், 42 மரக்கன்றுகளை நட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மொரப்பூர் கிழக்கு மண்டல், பா.ஜ., சார்பில், சாமாண்டஹள்ளி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தி, பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.