/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சதுக்கம் பெயர் பலகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பா.ஜ., ஹிந்து அமைப்புகள்
/
சதுக்கம் பெயர் பலகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பா.ஜ., ஹிந்து அமைப்புகள்
சதுக்கம் பெயர் பலகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பா.ஜ., ஹிந்து அமைப்புகள்
சதுக்கம் பெயர் பலகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட பா.ஜ., ஹிந்து அமைப்புகள்
ADDED : ஜன 25, 2025 02:16 AM
ஓசூர்: ஓசூரில், ஈ.வெ.ரா சதுக்கம் என்ற பெயர் பலகையை அகற்ற வலி-யுறுத்தி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரிங்ரோட்டில் உள்ள முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதிக்கு, ஈ.வெ.ரா சதுக்கம் என பெயர் சூட்ட, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை பெறப்பட்டு கடந்த, 21 ல், பெயர் பலகை வைக்கப்பட்டது. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரி-வித்து வருகின்றன. தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பல-கையை அகற்றி விட்டு, முனீஸ்வர் நகர் சர்க்கிள் என பெயர் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பெயர் பல-கையை அகற்ற வலியுறுத்தியும், பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்-புகள் ஒன்றாக சேர்ந்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதியில் திரண்டனர்.ஆனால், ஓசூர் டவுன் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார் மற்றும் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த, 200 க்கும் மேற்பட்டோர் தயாராகினர். அதனால் போலீசார் கைது செய்ய ஆயத்தமாகினர். ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை கைவிடப்பட்டு, தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகையை அகற்ற சட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்.

