/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் பா.ஜ., கட்சியினர் சுதந்திர தினவிழா பேரணி
/
ஓசூரில் பா.ஜ., கட்சியினர் சுதந்திர தினவிழா பேரணி
ADDED : ஆக 14, 2024 02:07 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், ஓசூர் ரிங்ரோட்டி-லுள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்ல, நேற்று காலை கட்சியினர் திரண்டனர்.
ஓசூர் சீத்தாராம் மேடு வழியாக, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்று, தொரப்பள்ளி அக்ரஹாரத்திலுள்ள ராஜாஜி சிலைக்கு மாலை அணிவிக்க பா.ஜ.,வினர் முடிவு செய்திருந்-தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்-போது, காரில் செல்லுமாறு போலீசார்
அறிவுறுத்தினர்.
இதையடுத்து, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், கட்சியினர் தேசியக்கொடியை கார்களில் கட்டிக்கொண்டு ஊர்வல-மாக தொரப்பள்ளி அக்ரஹாரம் சென்றனர். அங்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி சிலைக்கு, மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தி, அப்பகுதியில் துாய்மை பணி மேற்கொண்-டனர்.
மாவட்ட பொதுச்
செயலாளர் விஜயகுமார், செயலாளர் பிரவீன்குமார், பொருளாளர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலாயுதம், இளை-ஞரணி நிர்வாகி கிஷோர் உட்பட பலர்
பங்கேற்றனர்.

