/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாகிஸ்தானியரை வெளியேற்றக்கோரிகி.கிரியில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்
/
பாகிஸ்தானியரை வெளியேற்றக்கோரிகி.கிரியில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானியரை வெளியேற்றக்கோரிகி.கிரியில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானியரை வெளியேற்றக்கோரிகி.கிரியில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 06, 2025 02:27 AM
கிருஷ்ணகிரி:தமிழகத்தில்
சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியரை உடனே நாட்டை விட்டு
வெளியேற்றக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு
மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர்
கவியரசு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்,
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியரை
உடனடியாக நாட்டை விட்டு வெறியேற்ற வேண்டும். ஹிந்துக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வன்மையாக
கண்டிக்கின்றோம். பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில்
இறந்த, 26 பேரின் இறப்பை மன்னிக்க மாட்டோம் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னாள்
மாவட்டத் தலைவர் சிவபிரகாசம், முன்னாள் பொதுச் செயலாளர்கள்
கோவிந்தராஜ், சங்கர், தேசிய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் முனவரி பேகம்,
மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், கவுன்சிலர் சங்கர்,
நகர தலைவர் விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.
*கிருஷ்ணகிரி மேற்கு
மாவட்ட பா.ஜ., கட்சி சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே
நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர்
நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் நாகராஜ், முன்னாள் மாநில
செயற்குழு உறுப்பினர் முனிராஜ், விவசாய அணி முன்னாள் மாநில
துணைத்தலைவர் கோவிந்தரெட்டி முன்னிலை வகித்தனர். தேசிய பொதுக்குழு
உறுப்பினரும், முன்னாள்
எம்.பி.,யுமான நரசிம்மன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் சுதா நாகராஜன், முன்னாள் பொதுச்
செயலாளர்கள் அன்பரசன், வரதராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
*தர்மபுரி
மாவட்ட பா.ஜ., சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்,
கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை
தாங்கினார். நிர்வாகிகள் வெங்கட்ராஜ், ஆறுமுகம் உட்பட பலர் முன்னிலை
வகித்தனர். மகளிர் அணி மாவட்ட தலைவர் சங்கீதா மற்றும் மாநில, மாவட்ட,
ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.