/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., துணைத் தலைவர் கண்டனம்
/
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., துணைத் தலைவர் கண்டனம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., துணைத் தலைவர் கண்டனம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., துணைத் தலைவர் கண்டனம்
ADDED : நவ 29, 2024 01:37 AM
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு
பா.ஜ., துணைத் தலைவர் கண்டனம்
தர்மபுரி, நவ. 29-
விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கைவினை மற்றும் சிற்ப கலைஞர்கள் உள்ளிட்டோரின் தொழில் வளர்ச்சிக்காக, விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, ஜாதி அடிப்படையிலான திட்டம் போல் சித்தரித்து, தமிழக அரசு ஏற்காது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில், இந்த திட்டம் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைமுக தாக்குதல் நடக்கிறது. கலைகள் அழியாமல் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தும் வரைமுறைகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும். விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம், பஞ்., தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் இதற்கான உரிமையை வழங்க வேண்டும் என, முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் இந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும். சொந்த ஆதாயத்துக்காக கட்சி நடத்தும், தி.மு.க.,-வினர் தற்போது விஸ்வகர்மா திட்டத்தையும் எதிர்க்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.