ADDED : அக் 13, 2026 06:47 AM
கிருஷ்ணகிரி: பெண்ணுரிமையை பாதுகாக்காத காங்., கட்-சியைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒருங்கிணைந்த, பா.ஜ., மக-ளிரணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர்கள் கவியரசு, நாரா-யணா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மகளிரணி தலைவிகள் சிலம்பொலி, முத்துலட்-சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர்கள் முருகேசன், சுமதி, பொருளாளர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சுமதி, மாவட்ட துணை தலைவர் யசோதா, ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், நகர தலைவர் விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்., கட்சி தலைவர் ராகுல், ஆண் ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நாடகம் நடத்தி வரும் வேளையில், தன் கட்சியை சார்ந்த மணிப்பூர் எம்.பி., மற்றும் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைகழக மாணவியர், 11 பேர் பாலியல் புகார் அளித்துள்ளனர். பெண்ணுரிமையை பேணிக்காக்காத, காங்., கட்சி தலைவர் ராகு-லையும், பாலியல் புகாரில் சிக்கியுள்ள எம்.பி.,யையும் கண்டித்து கண்டன கோஷங்-களை எழுப்பினர்.
