/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சர்வீஸ் சாலையில் அமைத்திருந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு:நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
/
சர்வீஸ் சாலையில் அமைத்திருந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு:நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
சர்வீஸ் சாலையில் அமைத்திருந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு:நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
சர்வீஸ் சாலையில் அமைத்திருந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு:நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
ADDED : செப் 28, 2025 02:21 AM
ஓசூர்:ஓசூரில், சர்வீஸ் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், கால்வாய் அடைப்டை சரி செய்யாமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளியிலிருந்து சீத்தாராம்மேடு நோக்கி வரும் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், மாருதி நகர் அருகே எச்.டி.எப்.சி., வங்கி முன், சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது கழிவுநீர் தெரிக்கிறது.
கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்திலிருந்து, சற்று தொலைவில்தான், பத்தலப்பள்ளி பகுதியில் மேம்பாலம் கட்ட, புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏனோ, அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாயை சரிசெய்யாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் வங்கிக்கு வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய, மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதாக இல்லை. பத்தலப்பள்ளியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், இந்த சர்வீஸ் சாலையில் தான் திருப்பி விடப்படும். இச்சாலையில் கால்வாயில் ஆங்காங்கு அடைப்பு உள்ளதால், பாலம் பணிகள் துவங்கும் முன், சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த இரு ஆண்டுக்கு தொடர்ந்து சிரமப்பட வேண்டியிருக்கும் என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.