/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் கூட்டம்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் கூட்டம்
ADDED : மார் 20, 2024 01:53 AM
கிருஷ்ணகிரி:ஓசூரில், விஸ்வ விஷ்வ ஹிந்து பரிஷத் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில்,
தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ள அனைத்துலக, 'முத்தமிழ்
முருகன் மாநாடு' சனாதன நம்பிக்கையுள்ள ஆன்மிகவாதிகளால்
நடத்தப்பட வேண்டும். தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை தமிழக
அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, ஹிந்து கோவில்களில் வழிபாடு மற்றும்
தரிசன கட்டணத்திற்கு பல வகைகளில் கட்டணம் வசூலிக்கிறது. விஸ்வ
ஹிந்து பரிஷத் இதை வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த மாதம், 24 முதல், 28
வரை உத்தரபிரதேசம் அயோத்தி கரசேவைபுரத்தில் நடந்த கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான, வரும் லோக்சபா தேர்தலுக்கு
ஹிந்து சமய நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் கட்சி
வேட்பாளர்களுக்கு, 100 சதவீதம் ஹிந்துக்களும் ஓட்டளிக்க வேண்டும்.
அயோத்தியில், ஸ்ரீராமர் அவதரித்த அதே இடத்தில் கடந்த, 22ல் நடந்த
பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவேறியதற்காக
சன்னியாசிகள், சாதுக்கள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின்
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட, 11
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், செயலாளர் கிருஷ்ணன்,
பொருளாளர் பாபு, இணை செயலாளர் மஞ்சுநாத், பசு பாதுகாப்பு
அமைப்பாளர்கள் லோகேஷ், முனிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

