/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பூத் சிலிப் வினியோகம் பணி தீவிரம்
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பூத் சிலிப் வினியோகம் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பூத் சிலிப் வினியோகம் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பூத் சிலிப் வினியோகம் பணி தீவிரம்
ADDED : ஏப் 08, 2024 07:14 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், 16 லட்சத்து, 9,913 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக மொத்தம், 1,883 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஒரு ஓட்டுச்சாவடியில், 800 முதல், 1,000 வாக்காளர்கள் உள்ளனர். வரும், 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணி கடந்த, 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. விடுமுறை நாளான நேற்றும், பூத் சிலிப்புகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இப்பணியில், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஏரியாக சென்று, வாக்காளர்கள் விடுபடாத வகையில் பூத் சிலிப்புகளை வினியோகம் செய்ய, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு உத்தரவிட்டுள்ளார்.
பூத் சிலிப்புடன் சேர்த்து, தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா என்ற வாக்காளர் கையேடும் வினியோகம் செய்யப்படும். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை, ஓட்டுப்பதிவு நாள், வாக்களிப்பதற்கான வழிமுறைகள், ஆன்லைன் செயலிகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் பூத் சிலிப் வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், குறைப்பட்டசம் ஒரு நாளைக்கு, 100 வாக்காளர்களுக்காவது, பூத் சிலிப் வழங்க செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

