ADDED : மே 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், கர்நாடகா மாநிலம், பெங்களூரு பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவரது மகன் ராகுல், 15, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணையாற்றில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு வந்தார்.
வழிபாடு செய்வதற்கு முன், ராகுல் மற்றும் அவருடன் வந்த, இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.