/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் 'குணம் மருத்துவமனை' சார்பில் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு

ADDED : ஆக 06, 2025 01:13 AM
ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 'குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று காலை பேரணி நடந்தது. 'குணம் மருத்துவமனை' முன் துவங்கிய பேரணியை, மகப்பேறு மருத்துவர்கள் வனிதா பிரதீப், கவிதா செந்தில், ஸ்ரீசுதா விஜி ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் பங்கேற்ற மருத்து வமனை செவிலியர்கள், ஊழியர்கள், தாய்ப்பால் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி ரோடு, ஏரித்தெரு வழியாக, மீண்டும் மருத்துவமனையை சென்றடைந்தனர்.