/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் 4வது நாளாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
/
மாவட்டத்தில் 4வது நாளாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் 4வது நாளாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் 4வது நாளாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 06, 2025 01:13 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2ம் தேதி முதல் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. கடந்த, 2ம் தேதி, 28.30 மி.மீ., 3ம் தேதி, 51.40 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. நேற்று முன்தினம், 3வது நாளாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக போச்சம்பள்ளியில், 44.2 மி.மீ., அளவு மழை பதிவானது.
அதேபோல், தளி, பாரூரில் தலா, 40.4 மி.மீ., ஊத்தங்கரை, 36.8, பெனுகொண்டாபுரத்தில், 36, தேன்கனிக்கோட்டை, பாம்பாறு அணையில் தலா, 25, நெடுங்கல் பகுதியில், 24.20, ராயக்கோட்டையில், 16, கே.ஆர்.பி., அணையில், 10.80, கெலவரப்பள்ளி அணையில், 10, ஓசூரில், 10.10, அஞ்செட்டி, சூளகிரியில் தலா, 5, சின்னாறு அணையில், 4, கிருஷ்ணகிரியில், 3.20, என மாவட்டம் முழுவதும், 336.10 மீ.மீ., அளவிற்கு மழை பதிவாகி இருந்தது.
இந்நிலையில், 4வது நாளாக ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர் மழையால், மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 369 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து, 2 நாட்களாக தலா, 593 கன அடிநீர் அணை மற்றும் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 48.15 அடியாக நீர்மட்டம் இருந்தது.