sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாணிஒட்டு திட்டத்தை கொண்டு வருவது வாழ்நாள் லட்சியம்: எம்.பி., தம்பிதுரை

/

வாணிஒட்டு திட்டத்தை கொண்டு வருவது வாழ்நாள் லட்சியம்: எம்.பி., தம்பிதுரை

வாணிஒட்டு திட்டத்தை கொண்டு வருவது வாழ்நாள் லட்சியம்: எம்.பி., தம்பிதுரை

வாணிஒட்டு திட்டத்தை கொண்டு வருவது வாழ்நாள் லட்சியம்: எம்.பி., தம்பிதுரை


ADDED : ஆக 25, 2025 02:51 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில், வாணிஒட்டு திட்டத்தை கொண்டு வருவது, என் வாழ்நாள் லட்சியம்,'' என, ராஜ்ய சபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி சின்னமட்டாரப்பள்ளி பஞ்., இருளர் காலனி மற்றும் காரகுப்பம் பஞ்., சின்ன கார-குப்பம் கிராமத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்-பாட்டு நிதியில் இருந்து, தலா, 7 லட்சம் ரூபாய் என, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட, 2 பயணியர் நிழற்கூ-டத்தை, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை நேற்று திறந்து வைத்து பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகள், வளர்ச்சி பணிகளையும் செய்யக்கூடிய ஒரே கட்சி, அ.தி.மு.க.,தான். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி-ஒட்டு என்ற பகுதியில் தடுப்பணை கட்டுவது என் வாழ்நாள் லட்-சியம். இதற்கு, 10,000 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த திட்டம் அமைந்தால், வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதிகளில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்-பாசன வசதி பெறும். எனவே, வாணிஒட்டு திட்டத்தை, என் வாழ்நாளில் எப்பாடு பட்டாவது பெற்றுத் தருவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ரவிச்-சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us