/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே முகத்தை சிதைத்து வாலிபர் கொடூர கொலை
/
ஓசூர் அருகே முகத்தை சிதைத்து வாலிபர் கொடூர கொலை
ADDED : செப் 20, 2024 02:22 AM
ஓசூர்: ஓசூர் அருகே, வாலிபரின் முகத்தை சிதைத்து கொலை செய்த மர்ம நபர்கள், உடலை டாஸ்மாக் கடை அருகில் வீசி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அடுத்த கவுதாசபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாகலுார் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். கொலையா-னவரின் கையில் தீபா என, பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரை கொலை செய்தவர்கள், டாஸ்மாக் கடை அருகே வீசி சென்றிருக்-கலாம் என, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் கர்நாடக மாநில எல்லை உள்ளது. மேலும் கொலையானவரை அடை-யாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை கொலையாளிகள் சிதைத்துள்ளனர். ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா என்றும், அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் மாயமானவர்களின் தகவல்க-ளையும் போலீசார் சேகரித்து, விசாரித்து வருகின்றனர்.