/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழா
/
மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழா
மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழா
மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழா
ADDED : செப் 23, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மேம்பாலம் அருகே, மேச்சேரி நகரில் எருதுவிடும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் முதல் பரிசு டிராக்டர், 2ம் பரிசு புல்லட் என, 120 பரிசுகளுடன் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நபர்கள் தங்கள் வருமானத்திற்காக, இதுபோன்ற விழாக்களை நடத்தி, வசூல் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த விழாவிற்கு, போலீஸ் அனுமதி இல்லாத போதும், விழாக்குழுவினர், போலீஸ் பாதுகாப்பு உண்டு என நோட்டீஸ் அடித்து, வினியோகம் செய்துள்ளனர். மேலும், ஒரு காளைக்கு நுழைவு கட்டணமாக, 8,000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். பரிசுகள் அதிகம் என்பதால் ஏராளமான காளைகள் எருதுவிடும் விழாவிற்கு அழைத்து வரப்படுகின்றன. ஆனால் போலீசார் இதை தடுத்து நிறுத்துவதில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தி உள்ளனர். இது குறித்து, 10- பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்' என்றனர்.
பெயரளவுக்கு போடப்படும் வழக்குகளை தவிர்த்து, அனுமதியின்றி நடக்கும் எருதுவிடும் விழாக்களை போலீசார் தடுத்து நிறுத்த கோரிக்கை வலுத்துள்ளது.