/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிள்ளையார்கோவிலூரில் எருது விடும் திருவிழா
/
பிள்ளையார்கோவிலூரில் எருது விடும் திருவிழா
ADDED : பிப் 13, 2024 11:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கால்வேஅள்ளி பிள்ளையார் கோவிலுார் கிராமத்தில், நேற்று காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை எருது விடும் திருவிழா நடந்தது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும், 200க்கும் மேற்பட்ட எருதுகளை, அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். இதில், எருதுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓட விட்டு, குறைந்த நேரத்தில் கடக்கும் எருதுகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி முதல் பரிசாக, 41,000 ரூபாய், 2ம் பரிசாக, 31,000, 3ம் பரிசாக, 21,000 ரூபாய் என மொத்தம், 30 ரொக்கப் பரிசுகளும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக காமாட்சி விளக்குகளும் வழங்கப்பட்டன. முன்னதாக கால்நடைத்துறையினர் எருதுகளை பரிசோதித்து சான்று வழங்கினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.