/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்களால் பஸ் ஸ்டாண்ட், டோல்கேட்டில் நெரிசல்
/
பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்களால் பஸ் ஸ்டாண்ட், டோல்கேட்டில் நெரிசல்
பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்களால் பஸ் ஸ்டாண்ட், டோல்கேட்டில் நெரிசல்
பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்களால் பஸ் ஸ்டாண்ட், டோல்கேட்டில் நெரிசல்
ADDED : ஜன 14, 2025 02:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வெளி மாவட்டத்-தினர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் விசேஷ நாட்-களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இன்று பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறை வருவதாலும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். நேற்று காலை முதலே, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் பய-ணிகள் கூட்டம் அதிகரித்து
காணப்பட்டது.கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை, சேலம், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்களில், கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல ஊர்களுக்கு பஸ்கள் இல்லாமல் காத்திருந்து, கிடைக்கும் பஸ்களில்
முண்டியடித்து பயணிகள் ஏறினர்.அதேபோல பெங்களூரு, ஓசூரில் இருந்து கார்களில் ஏராளமான-வர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோ-துவதை கருத்தில் கொண்டும், திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட நேரமாக காத்திருக்கும் பயணிகள் செல்லும் இடங்க-ளுக்கு, தேவையறிந்து, சிறப்பு பஸ்களை மாற்றி விடுவதாக, போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறினர்.

