/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கன்டெய்னர் லாரியில் கார் மோதி வியாபாரி பலி
/
கன்டெய்னர் லாரியில் கார் மோதி வியாபாரி பலி
ADDED : செப் 28, 2025 04:04 AM
கிருஷ்ணகிரி:கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதியதில் வியாபாரி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்தவர் பசவராஜ், 43; கார் வியாபாரி. இவர், தன் நண்பர்கள் நான்கு பேருடன் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரியில் கார் வாங்க, 'ஸ்விப்ட் டிசையர்' காரில் சென்றார். பேரம் முடியாததால், கார் வாங்காமல் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மதியம், 1:00 மணிக்கு, திருவண்ணாமலை மேம்பாலத்தில் சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் சென்ற பஸ் மீது உரசியது. அதன் பின், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரிக்கும், பஸ்சுக்கும் இடையில் சென்றது.
அப்போது கன்டெய்னர் லாரியில் இடித்து நசுங்கிய நிலையில், மேம்பால தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் காரின் பின்புறம் அமர்ந்த பசவராஜ் பலியானார்.
மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஒருவர் காயமின்றி தப்பினார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.