/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உரிய விலை கிடைக்காத நிலையில் மீன்களுக்கு உணவாகும் முட்டைகோஸ்
/
உரிய விலை கிடைக்காத நிலையில் மீன்களுக்கு உணவாகும் முட்டைகோஸ்
உரிய விலை கிடைக்காத நிலையில் மீன்களுக்கு உணவாகும் முட்டைகோஸ்
உரிய விலை கிடைக்காத நிலையில் மீன்களுக்கு உணவாகும் முட்டைகோஸ்
ADDED : ஏப் 21, 2025 07:55 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, உத்தனபள்ளி, ராயகோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி கள் விவசாயம் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு சாகுபடி செய்த முட்டைகோஸ் நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், கிலோ, 3 முதல், 5 ரூபாய் வரை மட்டுமே, விவசாயிகளிடம் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள், கடும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் விவசாயிகள், இடைதரகர்கள் மூலம் வியாபாரிகளுக்கு முட்டைகோஸ்களை வழங்காமல், போச்சம்பள்ளி, பாரூர், காவேரிப்பட்டணம், மத்துார் சுற்று வட்டாரத்திலுள்ள ஏரிகளில், குத்தகை எடுத்து மீன் வளர்க்கும் ஒப்பந்ததாரர்களை தொடர்பு கொண்டு, அவர்களை நேரடியாக வரவழைத்தும், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்றும் முட்டைகோஸ்களை நேரடியாக டெலிவரி செய்வதால், கிலோவிற்கு, 7 முதல், 9 ரூபாய் வரை என, 4 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைக்கிறது.