/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தில் 81.99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம்
/
கி.கிரி மாவட்டத்தில் 81.99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம்
கி.கிரி மாவட்டத்தில் 81.99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம்
கி.கிரி மாவட்டத்தில் 81.99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம்
ADDED : நவ 13, 2025 03:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் கணக்கெடுப்பு படிவங்கள், வினியோகம் செய்யப்படுவது குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், 2026 நடந்து வருகிறது. கடந்த, 4 முதல் முதல், வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வாக்காளர்களுக்கு, 2 படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நாளது வரை, 16,80,626 வாக்காளர்களில், 13,77,894 வாக்காளர்களுக்கு, அதாவது, 81.99 சதவீதம் கணக்-கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள விபரங்கள் மற்றும் கடந்த, 2002/2005 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் விபரங்களை பூர்த்தி செய்ய, தொடர்-புடைய ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு உதவி புரிவர். தேவையான விளக்கங்களை, 1950 என்ற கட்டண-மில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம், https//:voters.eci.gov.in, http://voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர்களின் வசதிக்காக உருவாக்கியுள்ள, Book a call with BLO என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து தங்கள் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்து, தங்கள் பகுதியின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

