/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
/
ஓசூரில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ஓசூரில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ஓசூரில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ADDED : நவ 13, 2025 03:13 AM
ஓசூர்: ஓசூரில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலுார் சாலையிலுள்ள என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில், 87 சென்ட் நிலம், சிறுவர் பூங்கா-விற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 20 ஆண்டுகளாக பூங்கா அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்-திடம் பூங்கா கேட்டு மனு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, சிறுவர் பூங்கா அமைக்க முன்வந்தது. அதன்படி, 13 லட்சம் ரூபாய் மதிப்பில், வாக்கிங் செல்ல நடைபாதை, அமர்ந்து ஓய்வெடுக்க பெஞ்ச், சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், புல்வெளி, மின்விளக்கு வசதி, கழிவறை மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மரங்களுடன் கூடிய குறுங்காடு ஆகிய வசதிகளை, தனியார் நிறுவனம் செய்து கொடுத்தது.பூங்காவை, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா தலைமை வகித்து, பூங்-காவை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாநக-ராட்சி மண்டல தலைவர் ரவி, எம்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனி மக்கள் நலச்சங்க தலைவர் நீலகண்ட பிள்ளை, செயலாளர் செல்வம், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் பாஸ்கர் கிருஷ்ணா ஆறு-முகம், செயலாளர் சிவானந்தா கே ஹெட்ஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.

