/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த கன்று குட்டி மீட்பு
/
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த கன்று குட்டி மீட்பு
ADDED : செப் 19, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னகாரகுப்பத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன், 55. இவர், நேற்று மேய்ச்சலுக்கு தன் மாட்டையும், கன்று குட்டியையும் விவசாய நிலத்தில் விட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கன்று குட்டி, தரைமட்ட, 60 அடி கிணற்றில் விழுந்துள்ளது. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்று குட்டியை, பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில், வீரர்கள் ரமேஷ், அன்புமணி, கோகுல், சங்கர், அருண், பிரதாப், ஸ்ரீநாத் ஆகியோர் சென்று பொதுமக்கள் உதவியுடன், கயிறு கட்டி இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.