நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூரில் நேற்று மதியம், 3:00 மணிளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. பர்கூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பூமலை நகர் பகுதி சேர்ந்த கோபால், 70, என்பவர், 12 மாடுகளை வளர்த்து வந்தார். மாடுகளை அருகிலுள்ள குட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர், மழைக்கு ஒதுங்கினார்.
அப்போது மின்னல் தாக்கி ஒரு கன்றுக்குட்டி பலியானது. கோபாலுக்கும் காயம் ஏற்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.