/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அலுவலக பணியாளர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு
/
அலுவலக பணியாளர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி,
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பிற்கு, அலுவலக பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நாளை (28ம் தேதி) கடைசி நாளாகும்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான லதா வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பிற்கு, 'அலுவலக பணியாளர்' தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் அலுவலக பணியாளர்களாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை,
https://krishnagiri.dcourts.gov.in என்ற கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 28 (நாளை) மாலை, 5:30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.