/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தைகள் உதவி மையத்தில் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
குழந்தைகள் உதவி மையத்தில் பணி விண்ணப்பிக்க அழைப்பு
குழந்தைகள் உதவி மையத்தில் பணி விண்ணப்பிக்க அழைப்பு
குழந்தைகள் உதவி மையத்தில் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 03, 2025 03:02 AM
ஓசூர்:ஓசூர் குழந்தைகள் உதவி மையத்தில் உள்ள காலி பணியிடங்க-ளுக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், குழந்தைகளுக்கான உதவி மையம் அமைக்க ஏதுவாக, 3 குழந்தை உதவி மைய மேற்பார்-வையாளர்கள், தொகுப்பூதியம், 28,000 என்ற அடிப்படையிலும், 3 வழக்கு பணியாளர்கள், 18,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையிலும், மிஷன் வாத்சல்யா வழிகாட்டு நெறிமுறை-களின் படி, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற நிய-மிக்கப்பட உள்ளனர். மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு, சமூக பணி, சமூகவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என, ஏதாவது ஒரு பாடப்பிரிவில், அங்கீகரிக்கப்-பட்ட பல்கலை.,யில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட பல்-கலை.,யில், இளங்கலை பட்டத்துடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி தொடர்பாக, குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அறிவுத்திறமையோடு, 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவசர உதவி மையங்களில் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை. வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு, அங்கீக-ரிக்கப்பட்ட பள்ளிக்கல்வி தேர்வு வாரியம் அல்லது அதற்கு இணையான வாரியத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பேச்சு மற்றும் தொடர்பு திறன்கள் கொண்டிருக்க வேண்டும். அவசர உதவி மையங்களில் பணி அனுபவம் கொண்-டவர்களுக்கு முன்னுரிமை. 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, வரும், 13ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 100, 2வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். https://krishnagiri.nic.in என்ற இணையதளத்-திலிருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

