/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடந்து சென்றோர் மீது கார் மோதி வாலிபர் பலி; 5 பேர் படுகாயம்
/
நடந்து சென்றோர் மீது கார் மோதி வாலிபர் பலி; 5 பேர் படுகாயம்
நடந்து சென்றோர் மீது கார் மோதி வாலிபர் பலி; 5 பேர் படுகாயம்
நடந்து சென்றோர் மீது கார் மோதி வாலிபர் பலி; 5 பேர் படுகாயம்
ADDED : நவ 03, 2025 03:03 AM
ஓசூர்: அரியலுார் மாவட்டம், கீழ்காவட்டாங்குறிச்சி கீழ் தெருவை சேர்ந்த இன்பத்தமிழ், 22. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கொத்-தகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவரும், கேரள மாநி-லத்தை சேர்ந்த சுராஜ், 21, ஆனந்த், 22, எபி, 23, ஊத்தங்க-ரையை சேர்ந்த பிரவீன்குமார், 23, என, 5 பேர், நேற்று மதியம், 1:30 மணிக்கு கொத்தகொண்டப்பள்ளி பகுதியில், ராயக்-கோட்டை - அத்திப்பள்ளி சாலையோரம் நடந்து சென்றனர்.
அப்போது, அவ்வழியாக கொத்துாரை சேர்ந்த ஆபேல் நஞ்சுண்-டப்பா, 40, என்பவர் ஓட்டி வந்த மாருதி ஸ்விப்ட் கார், அவரது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று, நடந்து சென்ற, 5 பேர் மீதும் மோதியது. இதில், படுகாயமடைந்த இன்பத்தமிழ், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற, 4 பேர் மற்றும் கார் டிரைவர் என, 5 பேர் காயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், டிரைவர் ஆபேல் நஞ்சுண்டப்பா, பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மத்திகிரி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

