/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்
/
கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்
கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்
கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்
ADDED : நவ 03, 2025 03:03 AM
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, சின்னாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதையடுத்து, வேம்பள்ளி, ஒண்டியூர், கூட்டூர், போகிபுரம், தாசம்பட்டி ஆகிய, 5 கிராம மக்கள் சார்பில், நேற்று அணையின், உபரி நீர் வெளியேறும் பகுதியில், கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக மக்கள், தங்களது கிராமங்களிலிருந்து மேள, தாளங்கள் முழங்க மாவிளக்கை சுமந்தபடி ஊர்வலமாக அணைக்கு வந்தனர். அப்போது, அணை அருகே இருந்த மரத்தில் இருந்த மலை தேனீக்கள் கலைந்து, மக்களை விரட்டியது. தேனீக்கள் கொட்டியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 20 பேர் காயமடைந்து, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அணையில் தெப்பம் விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.