/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துவரை சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு
/
துவரை சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:30 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சூளகிரி வட்டாரத்தில் நடப்பாண்டு துவரை சாகுபடி, பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, விதை கிராம திட்டத்தில், துவரை விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் மூலம், (பயறு வகைகள்) விதைகள், சூடோமோனஸ், பயிறு நுண்ணுாட்ட கலவை, உயிர் உரங்கள் மற்றும் தார்பாலின் ஆகிய இடுபொருட்கள், 50 சதவீத மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், (குழித்தட்டு நாற்று நடவு) துவரை விதைகள், சூடோமோனஸ், பயிறு நுண்ணுாட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்றவை, 50 சதவீத மானியத்திலும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், துவரை விதைகள், சூடோமோனஸ், உயிர் உரங்கள் மற்றும் திரவ அங்கக உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களை, உங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மேலுமலை உதவி வேளாண் அலுவலர் வள்ளியம்மாளை, 95789 93077 என்ற எண்ணிலும், உத்தனப்பள்ளி, சூளகிரி உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வியை, 86758 76942 என்ற எண்ணிலும், காமன்தொட்டி, பேரிகை உதவி வேளாண் அலுவலர் முனிராஜை,- 95244 82616 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.